அந்த இயக்குனர் படத்தில் ஒரு முறையாவது நடித்துவிட வேண்டும் – மாளவிகா மோகனன்

தற்போதைக்கு தமிழ் சினிமாவின் முக்கியமான ஹீரோயின் என்றால் அது மாளவிகா மோகனன் தான். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு ஹீரோயின் பிரபலமாகவும், முக்கியமானவராகவும் இருந்து தான் வருகிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன்
நடித்துள்ளார். விரைவில் அந்த படம் வெளியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து மளமளவென புதிய படங்களில் ஒப்பந்தமாகி கொண்டிருக்கிறார். சூர்யா, தனுஷ் என அடுத்தடுத்த படங்கள் கைவசம் வைத்துள்ளார். இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வருவது மட்டும் தான் பாக்கி.

தமிழ் சினிமாவில் பெண்கள் மையப்படுத்திய கதை என்பது இல்லாமல் இருந்தது. தற்போது தான் பெண்களை மையப்படுத்தி படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாலும் மற்ற படங்களை ஒப்பிடும் பொது மிகமிக குறைவே என்று சொல்ல வேண்டும்.

இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை மாலவிகா மோகன், தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் தெரிவித்தனர். அப்போது தமிழ் சினிமாவில் எந்த இயக்குனருடன் ஒருமுறையாவது படம் நடித்து விட வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று ரசிகர்கள் மாளவிகா மோகனனிடம் டுவிட்டரில் கேட்டனர்.

அதற்கு மாளவிகா மோகனன், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதுவே எனக்கு சிறந்த நினைவாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் பேட்டை படத்தில் ரஜினியுடனும், மாஸ்டர் படத்தில் விஜய்யுடனும் நடித்தது எனக்கு கிடைத்த மிக பெரிய அதிர்ஷ்டம் என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை வெறும் கவர்ச்சி பொருளாகவே காட்சிப்படுத்தி வருகின்றனர். கதையில் எந்த தொடர்பும் இல்லாமலும், கதை கருவிற்கு எந்தவித தொடர்பும் இல்லாமல் வெறும் பாடல்களுக்கும், கவர்ச்சிக்கும் தான் பெரும்பாலும் நடிக்கவைக்கப்படுகிறார்கள். பெண் கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் அளிக்கப்படமலே இருந்து வருகிறது என்பது தமிழ் சினிமாவின் பெரும் பின்னடைவு என்பது உறுதி.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top