இந்தியாவில் 49 ரூபாய்க்கு கொரோனா மாத்திரை – முன்னணி நிறுவனம் சந்தைப்படுத்துகிறது

கொரோனா வைரஸ் தொற்றுக்கென எந்த மருந்தும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பிற நோய்களுக்கான மாத்திரை, ஊசி மருந்துகளை அவசர தேவைக்கு ஏற்ப சோதனை அடிப்படையில் பயன்படுத்த இந்தியாவில் அனுமதி அளிக்கப்படுகிறது. குறிப்பாக சுவாச நோய்களுக்கு தரப்படும் மாத்திரைகளே கொரோனாவுக்கும் தரப்படுகிறது.

இந்த நிலையில் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற பன்னாட்டு மருந்து நிறுவனம் லூபின், பேவிபிராவிர் மாத்திரையை கோவிஹால்ட் என்ற பெயரில் இந்தியாவில் வினியோகிக்க லூபின் நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது.

இந்த மருந்தை கொரோனா வைரஸ் தொற்றின் லேசான மற்றும் மிதமான பாதிப்பில் உள்ளவர்களுக்கு தர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத்திரை 200 மில்லிகிராம் அளவில் 10 மாத்திரைகள் கொண்ட அட்டையாக கிடைக்கிறது. இந்த மாத்திரை ஒன்று ரூ.49 என்ற விலைக்கு சந்தையிடப்பட்டுள்ளது.

இதுபற்றி லூபின் நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் சிபல் கூறுகையில், “காச நோய் போன்ற பரவலான சமூக நோய்களை நிர்வகிப்பதில், அதன் நிபுணத்துவத்தை இந்தியா முழுவதும் உள்ள நோயாளிகளை விரைவாக சென்றடையவும், அதன் வலுவான வினியோக வலையமைப்பு மற்றும் களப்பணி மூலம் கோவிஹால்ட் மாத்திரை கிடைப்பதை உறுதி செய்யவும் முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்”.

“இந்த கடினமான காலங்களில், கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடிவரும் நம் தேசத்திற்கும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மலிவான விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் இணைந்து போராடுவது நமது கடமையாகும்” என்று குறிப்பிட்டார்.

நேற்று சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பேபிபிராவிர் மாத்திரையை புளூகார்ட் என்ற பெயரில் மாத்திரை ஒன்றுக்கு ரூ.35 என்ற விலையில் சந்தையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், க்ளென்மார்க் நிறுவனம், ஃபேபுஃப்ளூ என்ற பெயரில் மாத்திரை ஒன்றுக்கு ரூ.75 என்ற விலையில் சந்தையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top