ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் “முர்மு” திடீர் ராஜினாமா

காஷ்மீருக்கான தன்னாட்சி அதிகாரத்தை அழிக்க வேண்டும் என்ற சங்க பரிவாரின் வெகுநாள் பிரகடனத்தை கடந்த ஆண்டு மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ ரத்து செய்யும் உத்தரவை கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி அன்று நிறைவேற்றியது.மேலும், அம்மாநிலம், இரண்டாக பிரிக்கப்பட்டது. லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

இந்திய அரசியல்சாசன சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதிபடுத்துகிறது. காஷ்மீர் மாநிலத்திற்குத் தனியான அரசியல் அமைப்புச் சட்டம் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. மத்திய அரசு தன்னிச்சையாக தனது முடிவை அமல்படுத்த முடியாது. அதே போல மத்திய அரசு காஷ்மீரில் நிதி அவசரநிலையைப் பிரகடனம் செய்வதற்கும் அதிகாரம் இல்லை. இந்த சட்டப் பிரிவைத்தான் நீக்கியது பாஜக அரசு.

லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும், காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் செயல்பட்டுவரும் நிலையில், ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிரிஷ் சந்திரா மர்மு, அக்டோபர் 31-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை ஆளுநர் என்ற பெயரைப் பெற்ற கிரிஷ் சந்திரா மர்மு, 9 மாத பதவிக்காலத்திற்குப் பின்னர் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக தற்போது மனோஜ் சின்ஹாவை நியமிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 1989-ம் ஆண்டிலிரு்து 1996-ம் ஆண்டுவரை பாஜகவின் தேசிய செயற்குழுவில் உறுப்பினராக மனோஜ் சின்ஹா இருந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்குவந்தபோது அப்போதும் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியானார் மனோஜ் சின்ஹா. ரயில்வே துறையின் இணையமைச்சராகவும், தகவல் தொழில்நுட்பத்துறைக்கு தனிப்பொறுப்பு அமைச்சராகவும் மனோஜ் சின்ஹா பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top