பப்ஜி கேம் மோகம் -திருப்பத்தூரில் பள்ளி மாணவன் தற்கொலை

ஊரடங்குக்கு முன்னரே இளைஞர்கள் பலர் ஆன்லைன் விளையாட்டான பப்ஜி கேமிற்க்கு அடிமையாக இருப்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. வன்முறையை மையப்படுத்தி இருக்கும் இந்த பப்ஜி விளையாட்டில் மூழ்கிவிட்டால் உலகம் மறந்துவிடும்.. ஆனால், அந்த கேம் உலகத்திற்குள் போக தொல்லை கொடுத்து இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த ஓமக்குப்பம் கொல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. 15 வயதான இவரது மகன் தினேஷ்குமார் மிட்டூர் அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு முடித்துவிட்டு 10 வகுப்புக்கு சென்றார்.

செவ்வாய்க்கிழமை பள்ளியில் புத்தகத்தை வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது, சக மாணவர்கள் கையில் ஸ்மார்ட் போனுடன் பப்ஜி கேம் விளையடியுள்ளனர்.அவர்கள் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தினேஷ்குமார், தனக்கும் பப்ஜி கேம் விளையாட வேண்டும் என ஆசையாக உள்ளதாகக்கூறி, நண்பர்களிடம் மொபைல் போன் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் யாரும் மொபைல் போன் தரவில்லை எனக்கூறப்படுகிறது.

இதற்கு முன்னரே தனக்கு ஸ்மார்ட்போன் வேண்டும் என்று பெற்றோரிடம் தினேஷ்குமார் கேட்டுள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய தினேஷ்குமாரின் தந்தை திருமூர்த்தியால் மகனுக்கு ஸ்மார்ட் போன் வாங்கித்தர முடியவில்லை.

இந்நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான தினேஷ்குமார் நேராக வீட்டுக்குச் சென்று தாயின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதேசமயம், சிறுவனின் மரணத்திற்கு பப்ஜி கேம் விளையாட செல்போன் வாங்கித்தராததுதான் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

போலீசார் சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து சிறுவன் தற்கொலைக்கான காரணம் குறித்து, பெற்றோர், கிராம மக்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top