ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை தோற்கடிக்கப்பட்ட நாள்: அசாதுதீன் ஒவைசி

ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டியதன் மூலம் பிரதமர் மோடி பதவி பிரமாணத்தை மீறிவிட்டார் என ஒவைசி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார். கோவில் கட்டுவதற்கான கல்வெட்டை திறந்து வைத்தார். அத்துடன் சிறப்பு தபால் தலையையும் வெளியிட்டார்.

இந்நிலையில் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டியதன் மூலம் பிரதமர் மோடி பதவி பிரமாணத்தை மீறிவிட்டார் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஒவைசி கூறுகையில் ‘‘இந்தியா மதச்சார்பின்மை நாடு. ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதன் மூலம் பிரதமர் பதவி பிரமாணத்தை மீறிவிட்டார். இந்த நாள் ஜனநாயகம், மதச்சார்பின்மை வீழ்த்தப்பட்ட நாள். இந்துத்வா வெற்றி பெற்ற நாள்.

மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன் என்று பிரதமர் கூறுகிறார். நானும் அதே உணர்ச்சிவசப்படுகிறேன். ஏனென்றால், குடியுரிமையின் சகவாழ்வு மற்றும் சமத்துவத்தை நான் நம்புகிறேன். மதிப்பிற்குரிய பிரதமரே, ஒரு மசூதி 450 ஆண்டுகளாக அங்கே இருந்தற்காக நானும் உணர்ச்சிவசப்படுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top