இந்தியாவில் 24 மணி நேரத்தில் 52,509 பேருக்கு கொரோனா; 857 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், கொரோனாவை எதிர்கொள்ளும் அளவிற்கு நவீன மருத்துவ கட்டமைப்புகள் இல்லாமல் இந்திய அரசு திணறி வருகிறது.

தொற்று பரவல் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்று இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. கொரோனா வைரஸ் தொற்று சமுகப்பரவலாக மாற்றம் பெறவில்லை என்று அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது. தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 857 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 19,08,255 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12.82 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 5.86 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 39795 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா, பிரேசில் நாடுகளை அடுத்து இந்தியா கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் உலகில் மூன்றாவது இடத்தில உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top