‘BoycottIPL’ எதிரொலி: ஐபிஎல் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்

பிசிசிஐ-யால் ஐபிஎல் டி20 லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2022 வரை சீன நிறுவனமான விவோ ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை பெற்றிருந்தது.

உயிரை கொள்ளும் கொரோனா வைரஸ் பரவல் போன்ற இக்கட்டான காலங்களிலும் இந்த ஐபிஎல் டி20 லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதின் காரணம் இதை நடத்தும் நிறுவனத்திற்கும், பிசிசிஐ-க்கும் நஷடம் ஏற்படாமல் இருப்பதற்காகவே என்று பலர் குறுகின்றனர்.

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோ உள்ள நிலையில் வருடத்திற்கு சுமார் 400 கோடி ரூபாய் பிசிசிஐ-க்கு இந்த சீன நிறுவனம் வழங்குகிறது.

ஜூன் மாதம் லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் சீன வீரர்களால் கொல்லப்பட்ட பிறகு சீனா பெருட்களையும், சீன நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஐபிஎல் ஆட்சி மன்றக்குழுவில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக விவோ தொடரும் என தெரிவிக்கப்பட்டது.

இதனால் ரசிகர்கள் மற்றும் மக்கள் கடும்கோபத்தை வெளிப்படுத்தினர். டுவிட்டரில் ‘BoycottIPL’ என ஹேஸ்டேக் உருவாக்கி எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ விலகியுள்ளது. இது பிசிசிஐ-க்கு மிகப்பெரிய அளவில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top