லெபனான் துறைமுகத்தில் 2,750 டன் அமோனியம் நைட்ரைட் வெடித்தது; 73 பேர் பாலி

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் இன்று அதிகாலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. இந்த வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.

வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக பெய்ரூட் துறைமுக பகுதியில் காணப்பட்டது.

துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய வேதிப்பொருளான “அமோனியம் நைட்ரேட்” எந்த வித முன்பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் வெடித்து உள்ளது என்று லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.

இந்த வெடிவிபத்தில் தற்போதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்து பிரதமர் கூறுகையில், “இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை இந்த நிகழ்வை கண்டு நங்கள் அமைதிகாக்கப்போவதில்லை, எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இந்த துயரசம்பவத்தை தொடர்ந்து வரும் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று லெபனான் அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த வெடிவிபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய 66மில்லியன் டாலர் அவசர நீதியாக அரசு அறிவித்துள்ளது.

இந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை’’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top