கனமழையால் முழுகிய மும்பை மாநகரம் – ரெட் அலெர்ட் அறிவிப்பு

மும்பையில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு தொடங்கிய மழை தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. இதனால், லோயர் பேர்ல் பகுதியில் உள்ள அணைத்து சாலைகளிலும் இடுப்பளவுக்கு தண்ணீர் சூழ்ந்ததால் கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

பேர்ல், பிரபாத்வி ரயில் நிலையங்களில் தண்டவாளங்கள் தெரியாத அளவுக்கு தண்ணீர் சூழ்ந்தது. தாதர், புனே, நாசிக், ஹிந்த்மடா, பெண்டி பஜார் உட்பட பல்வேறு நகரங்களில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியதால் வெள்ளக்காடாக காட்சியளித்தது. 10 மணி நேரத்தில் 23 சென்டி மீட்டர் மழை பெய்தது.

மும்பையில் சில பகுதிகளில் உள்ளூர் ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நாளுக்கு மட்டும் மும்பை மாநகராட்சிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது, மும்பையை சுற்றியுள்ள நகரங்களுக்கு இன்று மற்றும் நாளை சேர்த்து இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மும்பையில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மும்பை கடல் பகுதியில் இன்று பிற்பகலில் கடல் அலை 4 புள்ளி 5 மீட்டர் அளவுக்கு உயரக் கூடும் என்பதால் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top