செப்.15-க்குள் டிக்டாக்கை அமெரிக்காவிற்கு விற்றுவிடுங்கள் இல்லையேல் தடை உறுதி – டிரம்ப்

தென்சீன கடல் விவகாரம், உலக வர்த்தகப்போர் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது. இரு நாடுகளும் உலகம் முழுக்க உள்ள இடங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட புவிசார் அரசியல் போரை நிகழ்த்தி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்தனர். இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

இதை தொடர்ந்து அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாக கூறி தூதரகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டது. ஹூஸ்டன் தூதரகம் மூடப்பட்ட சில நாட்களில் பதிலடி நடவடிக்கையாக வுகான் நகரில் அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியது. இதனால் இரு நாடுகௌக்கு இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் நெருக்கடியால் சீன செயலிகளுக்கு பல்வேறு நாடுகள் தடை வித்துவருகிறது. இந்தியா சீனாவின் பல செயலிகளுக்கு தடைவிதித்தது. இதை தொடர்ந்து டிக்டாக் செயலியை தங்கள் நாட்டிலும் தடை விதிக்க அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

பைட் டான்ஸ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை மைக்ரோசாப்ட் நிறுவனம் டிரம்ப் அலசோனையோடு நடத்தியது. அந்த பேச்சு வார்த்தையில்

டிக்டோக்கின் அமெரிக்க பயனர்களின் அனைத்து தனிப்பட்ட தரவுகள் அமெரிக்காவிற்கு மாற்றப்படும் என்றும் மேலும் அது அமெரிக்காவிலே இருக்கும் என்றும் தரவுகள் அமரிக்காவை தவிர்த்து வேறு எங்கும் பயன்படுத்தப்பட்டது என்று உறுதி செய்வதாக டிக் டாக் நிறுவனம் கூறியது.

இது குறித்து டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

டிக்டாக் செயலியை வாங்குவது தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைவர் சந்திய நாதல்லாவுடன் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன்.

இந்த செயலியை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் ஆபத்தான ஒன்று. ஆகையால் டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை மைக்ரோசாப்ட் நிறுவனமோ அல்லது வேறு ஏதேனும் அமெரிக்க பெருநிறுவனமோ வாங்குவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

டிக்டாக்கின் 30 சதவிகித பங்குகளை மட்டும் வாங்குவதை விட அந்நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளையும் வாங்குவது சுலபமான ஒன்றுதான்.

அமெரிக்க நிறுவனங்கள் யாரும் டிக்டாக் செயலியை வாங்கவில்லை என்றால் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

ஒருவேளை விற்பனை நடைபெறும் பட்சத்தில் அந்த விற்பனை ஒப்பந்தத்திற்கு உதவும் வகையில் டிக்டாக்கை வாங்கும் அமெரிக்க நிறுவனத்திற்கு குறிப்பிட்டத் தொகை அரசின் பங்காக
வழங்கப்படும்.

என தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top