காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா உறுதி

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.மேலும் அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் அமித்ஷாவுக்கு கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்பட்ட்தால், பரிசோதனையில் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தற்பொழுது, சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், லேசான அறிகுறி இருப்பதால் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக ட்வீட் செய்துள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை மருத்துவர்களின் வழிகாட்டுதலின் படி தனிமைப்படுத்திக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top