உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து; அணைத்து பரிசோதனைகளும் வெற்றி – ரஷ்யா

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுவருகின்றன. தற்போது 20-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனையில் உள்ளன.

மாஸ்கோவில் உள்ள கமலேயா நிறுவனம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் அது பதிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என தெரியவந்ததாகவும் கடந்த மாதம் ரஷ்யா அறிவித்தது.

இந்நிலையில், மனிதர்கள் மீதான கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் நிறைவடைந்து அதில் வெற்றி பெற்றதாக ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் எனவும் அவர் கூறியதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.

முதலில் மருத்துவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அறிவியல் மற்றும் பாதுகாப்பை புறந்தள்ளிவிட்டு இதை கவுரவ பிரச்னையாக பார்க்கும் ரஷ்யா அவசரகதியில் தடுப்பூசியை அறிவிப்பதாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top