பாஜகவின் முக்கிய அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு

பாஜகவின் முக்கிய அரசியல் தலைவரும் மற்றும் பிரதமர் மோடியின் வலதுகை என்று அழைக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ”கொரோனாவிற்கான ஆரம்ப அறிகுறி எனக்கு தென்பட்டது. அதை தொடர்ந்து நான் மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது என் உடல்நிலை சீராக உள்ளது, இருந்தாலும் மருத்துவர்களின் ஆலோசனைபடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர் தயவு செய்து உங்களை சில நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்“ என்றுள்ளார்.

அமித்ஷா வருகிற 5-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமான அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொள்ள முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அமித்ஷா அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளமாட்டார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top