மதுரையில் ரஜினிக்கு வேண்டப்பட்ட யூடியூப் மாரிதாஸ் வீட்டில் சைபர்கிரைம் போலீஸார் விசாரணை!

பாஜக-ஆர்.எஸ்.எஸ் அனுதாபியும்,நடிகர் ரஜினிகாந்த்க்கு வேண்டப்பட்டவரும்  யூ-டியூப் மாரிதாஸ் அவதூறுகள் சொல்லியே பிரபலமானார்.அவர் வீட்டில், சென்னை சைபர்கிரைம் போலீஸார் நேற்று திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

மதுரை கே.புதூர் சூர்யா நகரைச் சேர்ந்த மாரிதாஸ், யூ டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் திராவிட கொள்கைகளுக்கு எதிராகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும், தொலைக்காட்சி நெறியாளர்களும் திராவிடக் கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக குற்றம்சாட்டி கருத்துகளை வெளியிட்டார்.

இந்நிலையில், மாரிதாஸ் போலி கடிதம் வெளியிட்டதாக சென்னை சைபர் கிரைம் போலீஸில் தனியார் டிவி சேனல் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சென்னை சைபர்கிரைம் பிரிவு ஏடிஎஸ்பி தலைமையில் 4 போலீஸார் நேற்று மதுரை வந்து மாரிதாஸ் வீட்டுக்குச் சென்று சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சில ஆவணங்களையும் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மாரிதாஸ் வீட்டின் முன்பாக திரண்டனர்.அவர்களை போலீஸ் விரட்டினர்.

அமைதியாக இயங்கும் தமிழகத்தை தேவையில்லாத அவதூறுகளை சொல்லி மக்களிடையே கலவரத்தை தூண்டி வட இந்தியாவை போல மதக்கலவரப்  பூமியாக மாற்ற  மாரிதாஸ் மற்றும் பாஜக அனுதாபிகள் முயலுவதாக புகார் கொடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top