கொரோனா ஊரடங்கு; மாமல்லபுரம் புராதன சின்னங்கள் 31-ந்தேதி வரை திறக்கப்படாது – தொல்லியல் துறை

தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி கொரோனா ஊரடங்கு காரணமாக மாமல்லபுரம் புராதன சின்னங்கள் 31-ந்தேதி வரை திறக்கப்படாது என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரேனா தொற்று பரவியதால் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. டெல்லி செங்கோட்டை, தாஜ்மகால், மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட முக்கிய நினைவு சின்னங்கள் மூடப்பட்டன. கொரேனா தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய நினைவு சின்னங்களை திறக்க மத்திய கலாசாரத்துறை கடந்த மாதம் உத்தரவிட்டது.

தற்போது தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நாளுக்கு, நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தளர்வுகள் இல்லாமலும், பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா தலங்களும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி வருகிற 31-ந்தேதி வரை மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்கள் திறக்கப்பட மாட்டாது என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top