இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா – குடும்பத்தினருடன் தனிமையானார்

இந்திய அளவில் கொரோனா தாக்கம் என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. களத்தில் வேலை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள், துமைப்பணியாளர்கள் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்கள் என அனைவர்க்கும் காரோண தொற்று பதித்து வரும் நிலையில். இந்திய திரை உலகத்தில் உள்ளவர்களையும் கொரோனா பதித்து வருகிறது.

தற்போது தெலுங்குத் திரையுலகின் முக்கிய இயக்குநரான ராஜமவுலிக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது.

சில தினங்களுக்கு முன்பு எனக்கும் என் குடும்பத்தினர் அனைவர்க்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அது தானாகவே சரியாகிவிட்டாலும், நாங்கள் பரிசோதனை செய்து கொண்டோம். இன்று பரிசோதனை முடிவில் மிதமான கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் எங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். எந்த அறிகுறியும் இல்லை நாங்கள் நன்றாக இருக்கிறோம். ஆனால், அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்காக காத்துகொண்டு இருக்கிறோம், உருவானதும் பிளாஸ்மா தானம் செய்ய உள்ளோம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top