ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மனித பரிசோதனைக்கு தமிழகத்தில் 2 இடங்கள் தயார்

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்து, அடுத்த மாதத்தில் மூன்றாவது கட்ட மனித சோதனைகளுக்கு நாடு முழுவதும் ஐந்து தளங்கள் தயாராக உள்ளன என்று உயிரி தொழில்நுட்பத் துறை (டிபிடி) செயலாளர் ரேணு ஸ்வரூப் நேற்று தெரிவித்து இருந்தார். பாரத் பயோடெக், ஜிடஸ் காடிலா நிறுவனங்களின் மருந்துகள் முதல் மற்றும் இரண்டாவது கட்ட சோதனையில் உள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் பல்வேறு தடுப்பு மருந்துகளின் இறுதிக்கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள நாடு முழுவதும் 5 இடங்களை மத்திய அரசு தயார்படுத்தி வைத்துள்ளது.

தமிழகத்தில் சென்னையில் உள்ள தேசிய தொற்று நோயியல் நிறுவனம், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆகியவையும், ஹரியானாவின் பால்வால், புனே, ஹைதராபாத் ஆகியவற்றில் தலா ஓர் இடமும் தயார் நிலையில் உள்ளன.

இதுவரை நோய்த் தொற்று ஏற்படாத மற்றும் ஆரோக்கியமான நபர்களை தேர்வு செய்து மிகப்பெரும் அளவில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதேபோல, மேலும் 6 இடங்களை தயார்படுத்த உள்ளதாக உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் ரேணு ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி தயாரானவுடன் அதை தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தை ஆக்ஸ்போர்டு மற்றும் அதன் கூட்டாளர் அஸ்ட்ராஜெனெகா ஆகியோரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top