6 வாரத்தில் கொரோனா தொற்று இருமடங்காகிவிட்டது: உலக சுகாதார அமைப்பு

கடந்த 6 வாரங்களில் கொரோனா தொற்று இருமடங்காகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது,

“ஜனவரி 30 ஆம் தேதி சர்வதேச நாடுகளின் அக்கறையை கணக்கில் கொண்டு பொது சுகாதார அவசரநிலையை நான் அறிவித்தபோது, சீனாவுக்கு வெளியே 100 க்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்தன, இறப்புகளும் இல்லை “

“ஆனால் அதை தொடர்ந்து தற்போது, கடந்த ஆறு வாரங்களில் கொரோனா தொற்று இருமடங்காகி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 1.6 கோடி பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6,40,000 பேர் கொரோனா தொற்றுக்குப் பலியாகி உள்ளனர்.

“கொரோனா உலகத்தை மாற்றியுள்ளது, மேலும் இது மக்களையும், சமூகங்களையும், உலக நாடுகளையும்ஒன்றிணைத்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

“அரசியல் தலைமைத்துவம், கல்வி, கொரோனா தொற்று சோதனை அதிகரிப்பு, சுகாதாரம் மற்றும் உடல் ரீதியான தூர விலகல் நடவடிக்கைகள் உட்பட பரிந்துரைக்கப்பட்ட சில காரணிகள் பல நாடுகளில் பயனுள்ளதாக இருப்பது நிரூபிக்கப்ட்டுள்ளதாக” அவர் மேற்கோள் காட்டினார்.

தற்போது 180 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா தொற்று மற்றும் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top