குஜராத் புதிய முதலமைச்சராக ஆனந்திபென் பட்டேல் பதவியேற்பு!

gujarat_cm_anandiben_patel_360குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஆனந்திபென் பட்டேல் சற்றுமுன் பதவி ஏற்றார். அவரது இந்த பதவி ஏற்பு விழாவில் நரேந்திர மோடி, அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

குஜராத் முதல்வர் பதவிக்கு ஆனந்திபென் படேல் பெயரை மாநில விவசாயத்துறை அமைச்சர் பூபேந்திர சிங் சுதாசமா முன்மொழிந்தார். அதனை அமித் ஷா உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். இதனையடுத்து, 73 வயதான ஆனந்தி பென் படேல், குஜராத்தின் புதிய முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து ஆனந்தி பென் படேல் இன்று 15வது முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கமலா தேவி பெனிவால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், அத்வானி, ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி, சுஸ்மா சுவராஜ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்னும் பெருமையை ஆனந்தி பென் படேல் பெறுகிறார். இதன் மூலம் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால முதல்வர் பணி முடிவுக்கு வந்தது.

குஜராத்தின் முதல்வராக பதவியேற்க இருக்கும் ஆனந்தி பென் படேல், நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரியவர். அவருக்கு வலதுகரம் போல் செயல்பட்டு வந்தவர். மோடிக்கு பிறகு குஜராத் முதல்வர் பதவிக்கு பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டாலும், அப்பதவிக்கு ஆனந்தி பென் தேர்வு செய்யப்பட்டதற்கு, அவர் சார்ந்த சமூகத்தினர் குஜராத்தில் அதிகளவில் வசிப்பதும் காரணமாக கூறப்படுகிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top