பிக்பாஸ் சித்ரவதை, டி.ஆர்.பி-க்காக தற்கொலை – ஓவியா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது நடிகை ஓவியா தான். மனதில் பட்டத்தை வெளிப்படையாக கூறும் தைரியமும், தன் இயல்பான போக்கையே வெளிப்படுத்திய அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர். சமூக வலைதளங்களில் ‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் பக்கங்கள் தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியே வந்தவுடன், அவர் எங்குச் சென்றாலும் பெருங்கூட்டம் கூடியது.

இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பதிவில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். “பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் ஓவியா.

அப்போது அந்தப் பதிவுக்கு ஒருவர் “ஆம். தடை செய்ய வேண்டும்” என்று பதிலளித்தார். ஓவியாவின் இந்த ட்வீட் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக ஓவியா “டிஆர்பிக்காக அவர்கள் போட்டியாளர்களை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு சித்ரவதை செய்யாமல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top