மத்திய அரசு ஊரடங்கு தளர்வு 3.0 – சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி?

ஊரங்கு தளர்வு 3.0 -வில் கட்டுப்பாட்டுகளுடன் சினிமா தியேட்டர்களை திறங்க அனுமதி வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கபப்ட்டு வந்தன.

தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 2.0 அமலில் உள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு 3.0 அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த ஊரடங்கின் போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஊரடங்கு தொடங்கியது முதல் மூடப்பட்டுள்ள சினிமா தியேட்டர்களை மீண்டும் திறக்க இந்த 3.0 தளர்வில் அனுமதி வழங்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சினிமா தியேட்டர்கள் மட்டுமல்லாமல் உடற்பயிற்சி நிலையங்களும் திறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள திரையரங்குகளை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்க அனுமதி வழங்கக்கோரி  மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சம் கோரிக்கை விடுத்துள்ளது.

50 சதவிகித இருக்கை வசதியுடன் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என தியேட்டர்கள் உரிமையாளர்கள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் சமூக இடைவெளியை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக 25 சதவிகித இருக்கை வசதியுடன் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை வழங்கியுள்ளது. 

அதேபோல் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள உடற்பயிற்சி நிலையங்களை மீண்டும் திறக்கவும் அனுமதி வழங்கப்படலாம் என்றும் ஆனால் பள்ளிகள், மெட்ரோ ரெயில் சேவைகள் தொடர்ந்து மூடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், ஊரடங்கு 3.0 தளர்வுகள் தொடர்பான விவரங்கள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top