PUBG கேம் செயலிக்கு இந்தியாவில் தடையா? – மத்திய அரசு

இந்தியா-சீனா எல்லை பிரச்சையின் பொது, சீனா இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அத்துமீறி எல்லைகளை ஆக்கிரமித்து வருகிறது. இதனை தொடர்ந்து, இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த மாதம் டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர், யுசி புரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்த நடவடிக்கை சீனாவுக்கு பொருளாதார நெருக்கடி குடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேலும் பல சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயலிகளின் போலி செயலிகள் இந்தியாவில் இயங்கி கொண்டு இருந்தது, இயங்கிய 47 செயலிகளுக்கு மத்திய அரசு வெள்ளியன்று தடை விதித்துள்ளது.

அமெரிக்காவும் சீன செயலிகளுக்கு தடை விதித்து வருகிறது. அமெரிக்கா சீனாவின் புவிசார் அரசியலின் போரின் காரணமாகவே இந்த நிகழுவுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், 275 சீன செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், இந்த செயலிகளின் தகவல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இவற்றுக்கும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது.

ஜியோமி, அலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட செயலிகள் தடை செய்யப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் பப்ஜி விளையாட்டு செயலியும் உள்ளது.

இந்தியாவில் மட்டும் 175 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் இந்த செயலி கொண்டுள்ளது.

தென் கொரியாவை சேர்ந்த ப்ளூஹோல் நிறுவனம், பப்ஜி கேமை தயாரித்திருந்தாலும், சீனாவை மையமாக கொண்டு இயங்கும் தொழில்நுட்ப நிறுவனமான டென்செண்ட், இந்த செயலியில் கணிசமான பங்குகளை வைத்துள்ளது.

ஏற்கனவே, பெற்றோர் மற்றும் மன நல ஆலோசகர்கள் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று கூறிவரும் நிலையில், பாதுகாப்பு கோளாறு புகாரையும் அரசு கையில் எடுத்துள்ளது. இதனால், தடை விதிக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top