கொரோனா பரவல் சில நாடுகளில் தீவிரமாக உள்ளது – உலக சுகாதார அமைப்பு

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ் 6 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளில் பரவி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 1.5 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

உலக நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுவருகின்றன. இதில் பிரிட்டன், ரஷ்யா, சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக உள்ளன. இந்த தடுப்பு மருந்து பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு தற்போது மனிதர்கள் மீது செலுத்தி சோதனை செய்யும் அளவிற்கு வந்துள்ளது.

இந்த நிலையில் சில நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “ஒப்பீட்டளவில் கொரோனா வைரஸ் சில நாடுகளில் தீவிரமாக உள்ளது. சிறிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. மொத்த கொரோனா பரவலில் மூன்றில் இரண்டு பங்கு 10 நாடுகளில் சேர்ந்தவையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கவில் 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top