தமிழகத்தில் புதிய உச்சத்தில் கொரோனா; 6,472 பேர் பாதிப்பு: 88 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்த அறிக்கையின்படி, இன்று 60,375 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் 20,75,522 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தமாக 1,92,964 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்தநிலையில் மொத்த உயிரிழப்பு 3,232 ஆக உள்ளது.

கொரோனா நோய் தொற்று குணமடைந்து இன்று மட்டும் 5,210 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 1,36,793 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.

இன்று சென்னையில் 1,336 பேரும், செங்கல்பட்டில் 375 பேரும், திருவள்ளூரில் 416 பேரும், தூத்துக்குடியில் 415 பேரும், விருதுநகரில் 480 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top