தமிழகத்தில் இன்று ‘கோவேக்சின்’ கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனை

ஹைதராபாத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும், பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் என்ற கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் சோதனையில் ஈடுபட்டு ஒரு சில முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

முற்றிலும் இந்தியா ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி மருந்தினை 2 விதமான சோதனைகளை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மனிதர்கள் மீதான சோதனையை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

அதன்படி இந்தியா முழுவதும் 12 இடங்களில் மனிதர்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி சோதனை நடத்தப்படுகிறது. இதில் தமிழகத்தில், சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் மட்டும் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு இன்று தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது. சோதனை முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top