தமிழகத்தில் கொரோனா புதிய உச்சம்; ஒரேநாளில் 5,849 பேர் பாதிப்பு: 74 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 5,849 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில்கடந்த 24 மணி நேரத்தில் 58,475 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,849 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுரையில், 1,86,492 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 74 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 3,144 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 1,171 பேருக்கும், செங்கல்பட்டில் 223 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 325 பேருக்கும், ராணிப்பேட்டையில் 414 பேருக்கும், திருவள்ளூரில் 430 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top