சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை வெளியிடும் பிரபல கிரிக்கெட் வீரர்

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது சூரரைப் போற்று திரைப்படம் உருவாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படம் வெளியாகாமல் இருக்கிறது. தன்னுடைய தனி நடிப்பு திறமையால் தனக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகர் சூர்யா.

வெறும் நடிப்புடன் நின்றுவிடாமல் தமிழ் சமூகத்தின் அடுத்த தலைமுறைகள் வறுமையின் காரணமாக அவர்களின் கல்வி நின்று விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு கல்வி வழங்கியும் வருகிறார். குறிப்பாக கிராமப்புற ஏழைமாணவர்களுக்கு இவர் கல்வி வழங்கி வருகிறார். தமிழ் சமூகத்தின் அரசியல் பிரச்சனைகளையும் மக்களிடத்தில் பேசி வருகிறார்.

நடிகர் சூர்யா தன்னுடைய பிறந்தநாளை ஜூலை 23ம் தேதி கொண்டாட இருக்கிறார். ஆனால், அவரது ரசிகர்கள் 100 நாட்களுக்கு முன்னதாகவே சமூகவலைத்தளங்களில் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 115 பிரபலங்கள் இணைந்து காமன் டிபி என்னும் போஸ்டரை வெளியிட்டார்கள். இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், சூர்யாவின் சிறப்பு போஸ்டரை பிறந்தநாளான நாளை சிஎஸ்கே மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரைனா வெளியிட இருக்கிறார். இது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இதை சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top