தமிழகத்தில் விடுபட்ட 444 கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கைகள் – அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிளாஸ்மா வங்கி இன்று திறக்கப்பட்டது.

பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டதை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விடுபட்ட மரணங்கள் குறித்த அறிக்கையுடன் செய்தியாளர்களை இன்று சந்தித்து கூறியதாவது:

தமிழகத்தில் வேறு காரணங்களுக்காக 444 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர், மருத்துவர் வடிவேல் தலைமையிலான குழு இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார்.

மார்ச் 1 முதல் ஜுன் 10 வரை விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444ஆக கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஆதலால் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் பட்டியலில் 444 மரணங்கள் சேர்க்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 444 மரணங்களில் ஒரு சிலர் மட்டுமே கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கண்டு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top