ஐபிஎல் T20; ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் – ஐ.பி.எல். தலைவர்

இந்தியாவில் மார்ச் மாதம் வழக்கமாக நடைபெற வேண்டிய ஐ.பி.எல். தொடர் இந்த ஆண்டு கொரோனா நோய் தோற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், ஐ.பி.எல் போட்டியை எங்கள் நாட்டில் நடத்தி கொள்ளலாம் என வேண்டுகோள் விடுத்தது, அதையடுத்து அங்கு நடத்த முடிவு செய்துள்ளதாக ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். கடைசி கட்ட முயற்சிதான் வெளிநாட்டில் நடத்துவது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.

நேற்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டதற்கான அதிகாரப்பூரவ முடிவு எடுக்கப்பட்டது. இதனால் செப்டம்பர்-அக்டோபர்-நவம்பரில் ஐபிஎல் தொடரை முழுவதுமாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

இதுகுறித்து ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல், ஐ.பி.எல். அட்டவணையை இறுதி செய்வது பற்றி 10 நாளில் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். ஐ.பி.எல். தொடரை நடத்துவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது ‘‘இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும். மத்திய அரசின் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். மற்ற முடிவுகள் ஐபிஎல் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் என்றார்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி சிறந்தமுறையில் உள்ளது மற்றும் வீரர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தங்குவதற்கான நட்சத்திர விடுதிகளும் உள்ளதால் ஐ.பி.எல். தொடர் நடத்த சிறந்த இடமாக இது இருக்கும்” என்று கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top