மூன்று நாட்களாக தமிழகத்தில் 5 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா – உயிரிழப்பு உச்சம்

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று கடந்த ஒரு மாதமாக அதி தீவிரமாக பரவி பெரும் பாதிப்புகளையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இந்த கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிரது.

தமிழகத்தில் இன்று 4965 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தொடர்ந்து இந்த தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது.

இன்று 4894 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தொடர்ந்து டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தை ஒட்டி செல்வது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று 1130 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் 75 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் உயிர் இழப்புகளும் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது.

தற்போது ஆட்சியில் உள்ள அரசு கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தன்மையை உணர்ந்து செயல்பட வேண்டும். கொரோனா நோய் தோற்று தமிழகத்தில் சமூக பரவலாக மாறியுள்ளதோ என்ற அச்சத்தை தருகிறது என்று எதிர் காட்சிகள் கூறுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top