ஜாதிய வன்மத்திற்கு பதிலடி கொடுத்த – நடிகை ரித்விகா

பல வருடங்களாக தமிழ் சினிமா ஜாதி வெறியை கட்டிபாதுகாத்து கொண்டுதான் இருக்கிறது அதன் தாக்கங்கள் தமிழ் சினிமாவின் படங்களை பார்த்தாலோ அல்லது பேர்களிலோ வெளிப்படையாகவே தெரியும். தற்போது உள்ள அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு ஆதரவாகவும் இந்த சினிமாக்கள் வேலைசெய்து கொண்டு தான் இருக்கின்றன. மதம் மற்றும் ஜாதி வெறி வெளிப்படையாக படமாக்க பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

மெட்ராஸ், அசுரன், உறியடி, பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் தமிழ் சினிமாவின் முன்னேற்ற முகங்கள் என்றால் கூறவேண்டும். ஜாதி எதிர்ப்பு படமாக மட்டும் இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல், அவர்களின் அரசியல் மற்றும் அவர்களின் விடுதலை போன்ற பல விஷயங்களை முன்னெடுத்து செல்கின்றன. இந்த திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் மாற்று முகமாக மட்டும் அமையாமல் வெற்றி முகமாகவும், ஆதிக்கத்திற்கு எதிரான முகமாகவும் வளர்ந்து வருகிறது.

இன்னொருபுறம் ஜாதி வெறியை கொண்டு படமெடுத்து கொண்டிருக்கும் இயக்குனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் தற்போது தனது தனித்துவமான மற்றும் திறமையான நடிப்பால் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் ரித்விகா.

மெட்ராஸ் படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து கபாலி போன்ற பல முக்கிய படங்களிலும் நடித்துள்ளார்.

சமூகவலைதளத்தில் ஒரு நபர் நடிகை ரித்விகாவை ஜாதி பெயரை குறிப்பிட்டு அவரின் ஜாதிய வன்மத்தை காட்டியுள்ளார்.

இதற்கு நடிகை ரித்விகா அந்த நபரின் வன்மத்திற்கு பதிலடி குடுக்கும் வகையில் பதில் அளித்தார். மேலும் இந்த ஜாதிய வன்மத்திற்கு எதிராக அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

ரித்விகா தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது, “தலித்தாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய? அப்பாக்கியம் நானடையேன். நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுள் பிறந்தவள் தான். வருந்துகிறேன். இனியாவது சாதிகளற்ற சமூகமாக, மனிதர்களாக வாழ முயற்சிப்போம். நிற்க.

ஒருவகையில் நானும் தலித் தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனின் பெண்ணாகிய நானும் தலித் தானே. காலங்காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர் தானே. ஆம் தலித். எம்மை தலித்தாக்கிய பிழையும் பாவமும் தங்கள் ஆணினத்தையே சாரும். மற்றபடி எம் அழகைப் பாராட்டியதற்கு நன்றி.

பி.கு – தலித் பெண்கள் என்னை விட அழகு” என்று ரித்விகா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top