ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பை ஒத்திவைப்பு: ஐசிசி அறிவிப்பு

இந்த ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தோற்று பரவல் காரணமாக போட்டியை நடத்த சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு கடந்த மாதமே தெரிவித்துவிட்டது.

ஆனால் ஐசிசி அதன்பின் இரண்டு முறை கூடிய போதும் டி20 உலக கோப்பை குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஐசிசி டி20 உலக கோப்பை 2021-ல் அக்டோபர் – நவம்பர் மாதம் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி நவம்பர் 14-ல் நடக்கும் என்றும், 2022-ம் ஆண்டு டி20 உலக கோப்பை அக்டோபர் – நவம்பரில் நடைபெறும் எனவும், இறுதிப் போட்டி நவம்பர் 13-ந்தேதி நடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் 2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை இந்தியாவில் அக்டோபர் – நவம்பரில் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி நவம்பர் 26-ந்தேதி நடைபெறும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top