தமிழகத்தில் 2,500-ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு; நேற்று 70 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று 4 ஆயிரத்து 985 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 861 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர்.

ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மேலும் 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று சென்னையில் மட்டும் 1,456 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top