ரயில்வேயில் 50% பணியிட ஆட்களை குறைக்க தொடங்கியது மத்திய அரசு

ரயில்வே துறையில் பாதுகாப்பு அல்லாத பணியிடங்களில் தற்போதுள்ள காலியிடங்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தும் பணி கோட்டவாரியாக நடைபெற்று வருகிறது. இதற்கான துறைரீதியிலான சுற்றறிக்கை கோட்ட மேலாளர்கள், துறைத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அளிக்கும் பாதுகாப்பு இல்லாத காலிப் பணியிட பட்டியலில் 50 இடங்கள் குறைக்கப்பட உள்ளன. இந்த நடவடிக்கையால் தென்னக ரயில்வேயில் சுமார் 4 ,000 பணியிடங்கள் உட்பட, நாடு முழுவதும் 60,000 பணியிடங்கள் குறைக்கப்பட உள்ளது. இதற்கிடையில், ரயில்வே துறையை தனியார்மய படுத்த மத்திய அரசு தீட்டங்கள் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு கடந்த டிசம்பர் மதம் அதாவது கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னரே இந்தியாவில் உள்ள 100 ரயில்வே பாதைகள், 150 ரயில்களை தேர்வு செய்து தனியார் நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்து விட்டது.

கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பை காரணம் காட்டி, ஆட்களைக் குறைப்பது கடும் பணிச்சுமை மற்றும் பயணிகள் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று (DREU) ரயில்வே ஊழியர்களின் துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top