பெரியார் சிலை அவமதிப்பு- ராகுல் காந்தி தமிழில் கண்டனம்

கோவை சுந்தராபுரம் பஸ் நிறுத்தத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை மீது நேற்று அதிகாலை காவி நிற சாயம் ஊற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திராவிட கழகத்தினர் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

இதை அறிந்த குனியமுத்தூர் போலீசார் விரைந்து வந்து பெரியார் சிலை மீது ஊற்றப்பட்ட காவி நிற சாயத்தை தண்ணீர் ஊற்றி கழுவினர். இதற்கிடையில் பெரியார் சிலை மீது காவி நிற சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி பெரியார் அமைப்பினரும், தி.மு.க.வினரும் மற்றும் பெரியார் உணர்வாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் சமூகத்தின் சுயமரியாதைக்கு, முன்னேற்றத்திற்கும் மற்றும் சாதி ஒழிப்பையும் தீவிரமாக எதிர்த்த பெரியார் சிலையை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் இயக்கங்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக பாரத் சேனா அமைப்பை சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்னும் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது என்று அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top