தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 79 பேர் உயிரிழப்பு – அதிகரிக்கும் உயிரிழப்பு

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 1,60,907 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 47,782 பேர் நோய் தொற்று காரணமாக சிகிச்சையில் உள்ளனர். 1,10,807 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,315 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிர் இழப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 56, தனியார் மருத்துவமனையில் 23 பேர் இறந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 28 பேர் 60 வயதுக்கு குறைவானவர்கள் ஆவர்.

இன்று மொத்தம் 16 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதை தவிர்த்து, செங்கல்பட்டு- 8, கோவை- 5, திருவள்ளூர்- 5, ராமநாதபுரம் – 4, மதுரை-4, திருவண்ணாமலை – 4, திருச்சி-3, வேலூர்-3, விழுப்புரம் – 1, காஞ்சிபுரம் – 1, ராணிப்பேட்டை-1, சிவகங்கை – 1, தேனி- 1, திருப்பத்தூர் – 1, தூத்துக்குடி-1 என சென்னை தவிர்த்து வெளிமாவட்டங்களில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், தென் மாவட்டங்களில் 11 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் உயிரிழப்பு என்பது அதிகரிக்கத்தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கொரோனா நோய் தொற்று பிற மாவட்டங்களில் அதி தீவிரமாக பரவி உயிர் இழப்புகளை அதிகரித்து வருவது குறித்து தமிழநாட்டின் எதிர்க்கட்சிகள் தமிழநாட்டில் கொரோனா நோய் தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது அரசு சரியான நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று கூறியுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top