ஐ.பி.எல் போட்டிகளை தொடங்க இன்று ஆலோசனை – இந்திய கிரிக்கெட் வாரியம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் நிர்வாகிகள் 11 விதமான அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.

கொரோனா காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டியை ஐ.சி.சி. முறைப்படி தள்ளிவைத்ததும் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கான ஆயத்தபணிகளை தொடங்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை எப்போது நடத்துவது, இந்தியாவில் நிலைமை மோசமாகிவிட்டால் அதை வெளிநாட்டிற்கு மாற்றலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மத்திய அரசிடம் இருந்து வரி விலக்கு பெற்றுத் தர இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. டிசம்பர் மாதம் வரை நேரம் வழங்கியுள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிப்பதற்கான பணிகளை தொடங்குவது குறித்தும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக போட்டிகள் நடைபெறும் பொது கிரிக்கெட் வீரர்களுக்கான பாதுகாப்பு முறைகள் மற்றும் அவர்களின் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்து கொண்டு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும், கிரிக்கெட் போட்டி நடைபெறும் நேரத்தில் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் உடல் நிலை பாதுகாப்பு மற்றும் போட்டி மைதானத்தை சுற்றி காவல் பணியில் ஈடுபட போகும் காவலர்கள் எண்ணிக்கை இந்த தருணத்தில் அரசால் வழங்க சாத்தியங்கள் உள்ளதா போன்ற விவாதங்களும் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top