தமிழகத்தில் கொரோனா தொற்று புது உச்சம்; தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா

தமிழகத்தில் இன்று 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே தமிழநாட்டின் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் உச்சம். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவாக இன்று 5,106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,07,416 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இன்று 69 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா தொற்று 4 ஆயிரத்தைக் கடந்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொற்று வேகமாக பரவிவருவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது.

மதுரை- 267, தூத்துக்குடி-171, கன்னியாகுமரி-146, விருதுநகர்-145, திருநெல்வேலி-130, திண்டுக்கல்-126, ராமநாதபுரம்-90, சிவகங்கை-83, தேனி-78, தென்காசி-20 என இந்த 10 மாவட்டங்களில் 1,256 பேருக்கு இன்று ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 10 மாவட்டங்களில் ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் எதிர்க்கட்சி, பிற காட்சிகள் மற்றும் அரசியல் இயக்கங்கள் தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று சமுகப்பரவலாக ஆகிவிட்டது. இதனை கணக்கில் கொண்டு அரசு விரைந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அதை விடுத்தது இந்த தொற்று சமுகப்பரவலாக மாறவில்லை என்று அரசு மறைத்து வருவதாகவும் கூறுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top