சி.பி.எஸ்.இயில் தமிழர் பண்பாட்டு பாடங்கள் திட்டமிட்டு நீக்கம் – வைகோ கண்டனம்

கொரோனா பொதுமுடக்கத்தை கருத்தில் கொண்டு, மாணவர்களின் சுமையைக் குறைக்கப்போவதாக தெரிவித்து சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30 விழுக்காடு படங்களை குறைத்தது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை.

அதன்படி சிபிஎஸ்இ மாணவர்களுக்கான ஒன்பது மற்றும் 10-ம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட பகுதிகள் தமிழர்களின் பண்பாட்டை மறைத்து, தேசியஒருமைப்பாட்டை கொலைக்கும் விதமாக உள்ளது என்று வைகோ கட்டணம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதிமுக தலைவர் வைகோ கூறியதாவது,

“தந்தை பெரியார் சிந்தனைகள், மா.பொ.சி.யின் எல்லைப் போராட்ட வரலாறு, ராஜராஜசோழனின் மெய்கீர்த்தி” போன்ற பாடங்களும், தமிழகப் பெண்களின் சிறப்புகளை விளக்கும் ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே’ எனும் படங்கள் நீக்கப்பட்டுள்ளது.

மேலும், திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த பாடங்களும், இந்திய தேசிய ராணுவத்தில் தமிழரின் பங்கு எனும் பகுதியும் அடியோடு நீக்கியிருக்கிறார்கள். சிபிஎஸ்இ மாணவர்களின் பாடச் சுமையைக் குறைக்கிறோம் என்று தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம், வரலாறு உள்ளிட்ட பாடங்களை பாஜக அரசு திட்டமிட்டே நீக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இந்தியாவின் பன்முகத்தன்மையை மிகமோசமாக நொறுக்கியுள்ளது, ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிப்பதற்கும், பாடப் பிரிவுகளில் இந்துத்துவ சனாதன கருத்துகளைப் புகுத்துவதற்கும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top