இங்கிலாந்தில் சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை – அமெரிக்கா காரணமா ?

சீனாவைச் சேர்ந்த பன்னாட்டுத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்கி வந்தது. கடந்த சில ஆண்டுகளாக உலக பொருளாதாரத்தை அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா கைப்பற்றியது. சீனாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா முறியடிக்க பல வேலைகளை செய்து வருகிறது.

இந்த சூழலில் ஹூவாய் நிறுவனம் அமெரிக்க பயனாளர்களின் தகவல்களை திருடி சீனாவுக்கு வழங்கி வருவதாகவும் இதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஹூவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.

அமெரிக்காவின் இந்த கொள்கை முடிவு சினைக்கு எதிரான நீண்ட ஆண்டுகள் நீடிக்க கூடிய தரும் விதமாக அமைந்துள்ளது, இந்த கொள்கை சீனாவுடனான அதன் புவிசார் அரசியல் போரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திற்கு நீண்டகால வெற்றியை அடைவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த செயலால் மற்ற உலக நாடுகளில் இயங்கி வரும் சீனாவின் ஹூவாய் நிறுவனத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா சார்புடைய நாடுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அறிவித்து ஹூவாய் நிறுவனத்தை தடை செய்து வருகிறது.

இந்த நிலையில் ஹூவாய் நிறுவனத்தின் மூலம் 5ஜி சேவையை பெற்று வரும் இங்கிலாந்து தங்கள் நாட்டில் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் 2027-ம் ஆண்டுக்குள் ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்ப சாதனங்கள் இங்கிலாந்தில் இருந்து முழுமையாக அகற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அதற்கு ஏற்றார்போல் இந்த ஆண்டின் டிசம்பர் இறுதிக்கு பிறகு ஹூவாய் நிறுவனத்திடமிருந்து புதிதாக 5ஜி தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்படுவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடந்த இங்கிலாந்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தின் இந்த நடவடிக்கையால், லண்டனில் உள்ள சீனா தூதர் லியு க்ஸியயோமிங் கூறியதாவது “இங்கிலாந்தின் இந்த நடவடிக்கையை தவறான முடிவு எனவும் இது ஏமாற்றத்தை தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top