தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் – 4526 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 4526 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1078 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சற்று பாதிப்பு குறைந்துள்ளது. கொரோனா பாதித்து இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைபெறுபவர்களும் உள்ளடக்கம். மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,099 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழக மருத்துவத்துறையினரின் மனிதநேய சேவையால் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 743 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 7-ம் தேதி 4343 பேர் பாதிக்கப்பட்டதே அதிகமாக இருந்த நிலையில், இன்றைய பாதிப்பு புதிய உச்சமாக அமைந்துள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கொரோனா தொற்று மிகவேகமாக பரவி வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top