இன்று மதியம் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பள்ளியை சேர்ந்த 16 லட்சம் மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளனர். நேற்று முன்தினம் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையான நிலையில் இன்று 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுமுடிவுகள் இன்று மதியம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள் cbse.nic.in, cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மாணவர்களின் மெயிலுக்கும் தேர்வு முடிவுகள் சென்றடையும்.

மாணவர்கள் எளிதான முறையில் CBSE10 < ROLLNUMBER > என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு குறுச்செய்தி அனுப்பினால், தேர்வு முடிவுகளை குறுச்செய்தியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top