கொரோனாக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு தெரியுமா? ஆய்வில் தகவல்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி சார்பில் கொரோனாவால் குணமடைந்த 90-க்கும் மேற்பட்டவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியின் வீரியமும் அளவுகளும் எப்படி செயல்படுகிறது என்று ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், காரோண பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில், குணமடைந்த 3 வாரங்கள்வரை மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகபட்ச திறனுடன் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு வேகமாக குறைந்தது.

60 சதவீத நோயாளிகளுக்கு வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தபோதிலும் அது சிறிது நாட்களுக்கே நீடிக்கிறது என்றும் அதிவேகத்தில் எதிர்ப்பு சக்தி குறைகிறது என்றும் கூறப்படுகிறது, 17 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே 3 மாதங்கள்வரை நோய் எதிர்ப்பு சக்தி நீடித்தது.

3 மாத காலத்தில் நிறைய பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி 23 மடங்கு குறைந்துவிட்டது. சிலருக்கு முற்றிலுமாக போய்விட்டது. இப்படி குணமடைந்தவர்களுக்கு பருவநிலை மாற்றத்தின்போது, மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்புள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள், மீண்டும் ஒரு காரோண தாக்குதல் அலைக்கு நிச்சயம் வழிவகுக்கும் என்றும் அதை கையாள எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அரசுகளுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்றும் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும், விரிவாக பார்த்தோம் என்றால் நாம் இந்த நோய் எதிர்ப்பு சக்தியை கவனமாக பார்த்து அணுகினால் அதற்கான சரியான தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top