சாத்தான்குளம் “லாக்அப்” கொலை: காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

சாத்தான்குளம் தந்தை, மகன் இருவரும் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு சிறையிலையே கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் என 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு நீதிபதி ஹேமானந்த்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. தேடுதல்வேட்டையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை முன்னதாக விசாரணை செய்துவந்தது சிபிசிஐடி. தற்போது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முதல் நிலை காவர் முத்துராஜா ஆகியோரை நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், 5 பேரும் மதுரை நீதிமன்றத்தில் இன்று காலை நேரில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணையில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்ற வளாகத்தினுள் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக கைதானவர்கள் அனைவரும் ஒரே வாகனத்தில் ஏற்றப்பட்டு நீதிமன்றத்தில் பின்வாசல் வழியாக உள்ளே அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து நீதிமன்றத்தில் அனைவரும் ஆஜர் படுத்தப்பட்டனர். தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கும் முன் இந்த கொலை வழக்கை நீதிமன்றத்தின் தலையிட்டால் சிபிசிஐடி விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top