ராஜஸ்தானில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு திட்டமா? ராகுல் காந்தியை சந்திக்கும் சச்சின் பைலட்

ராஜஸ்தானில் 107 எம்எல்ஏ-க்களுடன் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீடிர் என அந்த மாநிலத்தில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது, துணை முதலமைச்சர் சச்சின் பைலட் நடவடிக்கை இந்த குழப்பத்திற்கு காரணமாகும்.

முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கு அதிதீவிர வேலையிகள் நடந்து வருகிறது. 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில், 107 எம்எல்ஏ-க்களுடன் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், துணை முதலமைச்சர் சச்சின் பைலட், தனது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் பாஜக-வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதையடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள அசோக் கெலாட் இல்லத்தில் எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு முதலமைச்சர் அசோக் கெலாட் அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சச்சின் பைலட்டின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

92 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 10 சுயேச்சை எம்எல்ஏக்களும் அசோக் கெலாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சச்சின் பைலட்டின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இரண்டு பேர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த முற்பட்ட சச்சின் பைலட், பாஜக-வில் இணையப் போவதில்லை என்றும் புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளிவருகிறது. இந்த நிலையில், இன்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அசோக் கெலாட் அரசுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும், இன்று மாலை ராகுல் காந்தியை, சச்சின் பைலட் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top