கொரோனா பாதிப்பு தமிழகத்தில் இன்றும் 4 ஆயிரத்தைக் கடந்தது

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பெரிதாக இல்லாத சூழல் நிலவிவந்தது. ஆனால் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் இன்று 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 66 பேர் உயிரிழந்துள்ளனர், மொத்த உயிரிழப்பு 2,032 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 3,035 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இதுவரை மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 92,567 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், இன்று 1140 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், மதுரையில் 464 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 352 பேருக்கும், திருவள்ளூரில் 337 பேருக்கும், செங்கல்பட்டில் 219 பேருக்கும் இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம், வேலூர், நெல்லை, தூத்துக்குடி, தேனி, சேலம், ராணிபேட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று 100-க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மொத்தமாக 12 மாவட்டங்களில் இன்று நூற்றுக்கும் அதிகமாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top