தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா உறுதி – அதிமுக அமைச்சர்களுக்கு கொரோனா

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே அவரது மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

முன்னதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சில வாரங்களாக தொடர்ந்து அதிமுக அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் இன்று தலைமை செயலகம் மூடப்பட்டு உள்ளது . இரண்டு நாட்களுக்கு மூடப்பட்ட தலைமை செயலகத்தில் கிருமிநாசினிகள் தெளித்து வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top