உண்மையை தடுக்கவும், அரசை காக்கவும் கார் கவிழ்க்கப்பட்டுள்ளது – அகிலேஷ், பிரியங்கா காந்தி கேள்வி

உத்தரப்பிரதேசம் கான்பூரில் 8 போலீஸாரைக் கொலை செய்த ரவுடி கும்பலின் தலைவன் விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார், அவரைப் பாதுகாத்தவர்களை உ.பி. அரசு என்ன செய்யப்போகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளனர்

கான்பூர் அருகில் உள்ள பிக்ருஎன்ற கிராமத்துக்கு கடந்த 2-ம் தேதி ரவுடி விகாஸ் துபேவை போலீஸார் பிடிக்கச் சென்ற பொது, ரவுடி கும்பலால் டிஎஸ்பி, 2 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ரவுடி விகாஸ் துபே அங்கயே இருந்து தப்பி சென்றார், இந்த கும்பலைப் பிடிக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து விகாஸ் துபேயின் கூட்டாளிகள் 3 பேர் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டநிலையில், நேற்று காலை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் கோவிலில் விகாஸ் துபேயை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கான்பூரை நெருங்கியபோது அவர்கள் வந்த வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் போலீசார் அனைவரும் அந்த வாகனத்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்ப முயன்றுள்ளான். அவரை போலீசார் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்நிலையில் ரவுடி விகாஸ் துபே போலீசாரால் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உ.பி. பாஜக யோகி ஆதித்யநாத் அரசை விமர்சித்துள்ளார்.

பிரியங்கா காந்தி ட்விட்டரில் “ கிரிமினல் கொல்லப்பட்டுவிட்டார், அவரைப் பாதுகாக்க முயன்றவர்களையும், குற்றவாளி செய்த குற்றங்களையும் அரசு என்ன செய்யப்போகிறது. கான்பூர் போலீஸார் கொல்லப்பட்ட வழக்கை கையாளுவதில் ஆளும் பாஜக அரசு முற்றிலும்தோல்வி அடைந்துவிட்டது” என விமர்சித்துள்ளார்

சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் “ உண்மையில் கார் கவிழவில்லை. உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடாமல் தடுக்கவும், அரசை காக்கவும் கவிழ்க்கப்பட்டுள்ளது” என விமர்சித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top