சாத்தான்குளம் கொலை வழக்கு- இன்று சிபிஐக்கு மாற்றம்

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசாரால் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ இன்று தொடங்குகிறது.

7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மதுரை வருகின்றனர். இதற்கிடையே ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா தலைமையிலான குழு மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியது.

சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் சிபிஐ அதிகாரிகளிடம் வழங்க உள்ளார். அதன்பின்னர் வழக்கு தொடர்பான கோப்புகளை பெற்றதும், முதலில் இருந்து விசாரணையை தொடங்க உள்ளது.

இதற்கிடையே தந்தை, மகன் கொலை தொடர்பான வழக்கு ஆவணங்கள் அனைத்தும் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி, இதுவரை 10 போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top