உத்தர பிரதேச மாநிலத்தில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை

உத்தர பிரதேசத்தில் கான்பூர் அருகே பிக்ரு கிராமத்தில் இருந்த ரவுடி விகாஸ் துபேயை பிடிக்கச் சென்ற 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர். பாஜக தலைமையில் உத்தர பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்காக 20 போலீஸ் குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

இதை தொடர்ந்து விகாஸ் துபேயின் கூட்டாளிகள் 3 பேர் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டநிலையில், நேற்று காலை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் கோவிலில் விகாஸ் துபேயை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விசாரணைக்குப் பின்னர் உத்தர பிரதேச போலீசில் விகாஸ் துபே ஒப்படைக்கப்பட்டான். அவனை உத்தர பிரதேச அதிரடிப்படை போலீசார், இன்று பலத்த பாதுகாப்புடன் கான்பூருக்கு கொண்டு வந்தனர்.

கான்பூரை நெருங்கியபோது அவர்கள் வந்த வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் போலீசார் அனைவரும் அந்த வாகனத்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்ப முயன்றுள்ளான். அவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதில் பலத்த காயமடைந்த விகாஸ் துபே சிறிது நேரத்தில் உயிரிழந்தான்.

பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து வன்முறையும் என்கவுண்டர்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top